பாடசாலைக் கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் - தரம் ஒன்று மாணவர்களை வரவேற்ற நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்-
ரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் 'பாடசாலைக் கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் 2016'என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு நாடுமுழுவதிலுமுள்ள பாடசாலைகளில் நேற்று (14-01-2016) நடைபெற்றது. இதில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில்; அதிபர் எம்.ஐ.எம்.மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜஹாங்கீர்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக அஸ்-சமா நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எம்.கமால்தீன் விஷேட அதிதிகளாக வவுனியா மாவட்ட நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப், சம்ஷ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர், ஆசிரிய ஆலோசகர் ரி.எம்.ஹபீபுள்ளாஹ், காதி நிதிபதி என்.எம்.இஸ்மாயில், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் கொழும்புக் கிளை உறுப்பினர்களான சுகைல் ஜமால்தீன், ஏ.ஜே.எம்.அஸ்றி, எம்.எல்.கே.ஜரீத் மற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் பெற்றோர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். 

இங்கு தரம் ஒன்று புதிய மாணவர்களை தரம் இரண்டு பழைய மாணவர்கள் மலர்ச் செண்டு கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் புதிய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -