மலையகத்தில் தேசிய தைப்பொங்கல் விழா...!

 க.கிஷாந்தன்-
லையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 15.01.2016 அன்று அட்டன் டன்பார் மைதானத்தில் 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த மலையக தேசிய தைப்பொங்கல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக அமைச்சர் திகாம்பரம் சூரியப்பொங்கல் பொங்கி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து விசேட அம்சமாக தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மங்கள வாத்திய கலைஞர்களின் மேளக் கச்சேரி இடம்பெற்றதோடு, வரவேற்பு நடனம், பரதநாட்டியம் மற்றும் மலையகப் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜீன ரணதுங்க, தேசிய ஒருங்கிணைப்பு, உரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -