ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது - நீதிபதி காட்டம்

னது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை கோரி மனுவொன்று இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் போதிய விளக்கங்கள் இன்றி பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிபதி ரங்க திசாநாயக்க அதனை நிராகரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நீதிபதி, எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் நான் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் செய்ய மாட்டேன். அதனால் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது.

நான் தவறு செய்திருந்தால் மேலதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஏனெனில் நான் தவறு செய்யவில்லை. பிணை வழங்க போதுமான விடயங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்படவில்லை.

அத்துடன் இந்த வழக்கை நான் தொடர்ந்தும் விசாரிக்க விரும்பவில்லை. இது குறித்து சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளேன். பெரும்பாலும் அடுத்த வழக்குத் தவணைக்கு வேறொரு நீதிபதியே இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் நீதிபதி ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -