ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் மூவர் கைது..!

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்திற்குள் வந்து, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு எதிரிலும் உள்ளேயும் நுழைந்த பிக்குமார் உள்ளிட்ட சிலர் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -