ஆறு வருடம் பாலியல் அடிமையாக வாழ்ந்த சிறுமியின் வாழ்க்கையில் நடந்தவை..!

14 வயதான பிரித்தானிய சிறுமி, தனது தாயுடன் விடுமுறைக்காக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

எனினும் சில நாட்களுக்கு உள்ளேயே சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்டுள்ளார். அந்த நாட்களில் இருந்து குறித்த சிறுமி 6 வருடங்களுக்கு பாலியல் அடிமையாக வாழ்ந்துள்ளார்.

மேகன் ஸ்டேபன் என்ற பெயருடைய இவர், ஒரு நாளில் 50 பேரிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது, வாழ்கை குறித்து அவர் தெரிவிக்கையில், "ஒரு முறை 22 மணித்தியாலங்களில் 110 நபர்கள், என்னை பாலியல் உறவில் ஈடுபடுத்தினார்கள்" என்றார்.

எனினும் குறித்த வியாபரிகளிடம் இருந்து மீண்டு, மீண்டும் பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்.

பின்னர் தனது வாழ்கையில் இடம்பெற்ற விடயங்களை வெளிநாட்டு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் இப்போது திருமணம் முடித்து கர்ப்பம் தரித்துள்ளார்.

எனினும் தற்போது பாலியல் கொடுமையில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதும், அவர்களுக்கு மீள் வாழ்வளிப்பதுவுமே இவரின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -