அம்பாறையில் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டம்.!

ஏ.எல்.எம். நபார்டீன், அபு அலா -
ம்பாறை மாவட்ட கரும்புக் காணி உரிமையாளர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிய இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்துடன் உண்ணாவிரதமும் எதிர்வரும் சனிக்கிழமை (30) ஹிங்குரான நகரத்தில் இடம்பெறவுள்ளதாக ஆலங்குளம் விவசாயிகள் அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் இன்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

கடந்த மாதம் 10 ஆம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திய பின்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் இதுதொடர்பிலான எழுத்து மூல மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தும் இதுவரை காலமும் இப்பிரச்சினை தீர்க்கப்படமால் உள்ளதை அடுத்தே இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் எதிர்வரும் சனிக்கிழமை (30) ஹிங்குரான நகரத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அம்பாறை மாவட்ட ஒன்றிணைந்த விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பு எனும் பெயரில் ஆலங்குளம், தீகவாவி, நுரைச்சோலை, நீத்தை, இறக்காமம், கல்முனை, கல்மடுவ போன்ற பிரதேசங்களிலுள்ள 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -