ஷபீக் ஹுஸைன்-
சொறிக்கல்முனை சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள 6ஆம் கொளனி, அல்-மஸ்ஜிதுல் ரௌழா மையவாடி பள்ளிவாசல் சுற்று வேலி சனிக்கிழமை (26) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (நேற்று 27) அப்பிரதேசத்துக்கு திடீர் விஜயமொன்றை மெற்கொண்டு அங்கு சென்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார்.
இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு நிருவகிக்கப்பட்டு வந்த பழைமைவாய்ந்த நிலையில் காணப்பட்டதால் உடைக்கப்பட்டு சவூதி அரேபிய டுபாய் நாட்டின் ரகுமா அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் செலவில் முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிப்பதற்கென அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் இடம்பெற்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



