எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அன்னமலை வேப்பையடி மதுபானசாலையை உடனடியாக மூடுமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை வேப்பையடி செல்வ வினாயகர் ஆலயம் முன்பாக அமைதியான முறையில் சுலோகங்களை ஏந்திக் கொண்டு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மதுபானச்சாலைக்கு அருகில் பாடசாலை, வைத்தியசாலை, கோயில்கள், மக்கள் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. இந்த மதுபானச்சாலையால் பாரிய சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் ஆகியோர்களிடம் பொது மக்களால் கையொப்பமிட்ட மகஜர்களும் கையளிக்கப்பட்டன.




