கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுக்கப் போய் இரு சிறுவர்கள் பாதையில் விபத்துக்குள்ளாகி இறந்துள்ள சம்பவமொன்று துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
லொறியொன்றில் மோதியே இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.
பாதைக்கு நடுவில் சென்று பறந்து கொண்டிருந்த விமானத்துடன் சேர்ந்து இருவரும் செல்பி எடுக்கச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறந்தவர்களில் ஒருவர் 17 வயதையும், மற்றவர் 19 வயதையும் உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
