அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரருக்கிடையில் அனல் பரக்கும் மோதல் இன்று..!

மைச்சர் றிசாத் பதியுத்தீன் – பஹியங்கல ஆனந்தசாகர தேரர், இன்று திங்கட்கிழமை ஹிரு தொலைக்காட்சியின் இன்று இரவு 10 மணிக்கு ‘சலகுன’ எனும் நேரடி விவாத நிகழ்சியில் மோதிக் கொள்கின்றனர்.

வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மேலும் பல சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக, பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் றிசாத் பதியுத்தீன், இது தொடர்பில் ஆனந்தசாகர தேரரிடம் சவாலினையும் விடுத்திருந்தார்.

இதனையடுத்து மேற்படி இருவரும், நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்குபற்ற இணக்கம் வெளியிட்டதோடு, ஹிரு தொலைகாட்சியில் அந்த விவாதத்தை நடத்துவற்கும் விருப்பம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று திங்கட்கிழமை, ஹிரு தொலைகாட்சியில் ‘சலக்குன’ விவாத நிகழ்ச்சி, குறித்த விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு , சட்டவிரோத குடியேற்றம் , மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு சட்டவிரோத செயலற்பாடுகளில் அமைச்சர் றிசாத் ஈடுபடுவதாக பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இவற்றை மறுத்திருந்த அமைச்சர், தன்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -