![]() |
| நாஸிறூன்- |
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்களின் மேம்பாட்டுப் பேரவையின் இன்னும் ஒரு நிகழ்வாய் முற்றத்து முகவரிகளின் முப்பெருவிழா 2015 எனும் தலைப்பில் மூன்று நூல்களை வெளியிடும் நிகழ்வும் கௌரவிக்கும் நிகழ்வும் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் வரலாற்றாய்வாளர் ஜலீல் ஜீ தலைமையில் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான விபுலமாமனி வி.ரீ.சகாதேவராஜாவின் வழிநடத்தலின் கீழ் காரைதீவு சண்முகா மகா வித்தியாலய சண்முகா கலாலயத்தில் 2015-12-27 ஆம் திகதி இடம்பெற்றது.
வரலாற்றுப்புகழ்மிக்க இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண
சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பேரவையின் பெண் எழுத்தாளர்கள் 20பேரின் வரலாறு மற்றும் அவர்களது படைப்புகள் அடங்கிய தொகுப்புநூலான “முற்றத்துமுகவரிகள்” எனும் நூல் மற்றும்
வரலாற்றாய்வாளர் ஜலீல் ஜீ எழுதிய“வேப்பஞ்சோலை” மற்றும் “இடம்பெயர் ஆய்வுகள்” ஆகிய மூன்று நூல்கள்
வெளியிட்டுவைக்கப்பட்டன
இதன் போது வேப்பஞ்ச்சோலை வரலாற்று ஆய்வு நூலுக்கான முதற் பிரதியை தங்க நகை விற்பனையில் பாண்டித்தியம் பெற்று திகழுவது மாத்திரம் இன்றி சமூக சேவைகள் பலவற்றில் அதிக அக்கறையில் செயற்படும் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சொர்ணம் குழுமத்தின் பணிப்பாளர் ஜெ.பிரகாஸ் அவர்கள் அதனை
பெற்றுக்கொண்டனர்.
இவ்விட்த்தில் இந்நிகழ்வுக்கு பல உதவிகளை வழங்கியமைகாக தங்களது மனாமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக பேரவையின் சார்பாக அதன் தலைவர் வரலாற்றாய்வாளர் தேசமான்ய ஜலீல் ஜீ அவர்கள் தெரிவித்தார்.
இதற்கான முதன்மைப்பிரதிகளை உலமாகட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா மீடியா பௌண்டேசனின் செயலாளருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீட், கலாநிதி இசட்.ஏ.பஷீர் மற்றும் தேசமான்ய ஏ.கிரிஷ்ணமூர்த்தி ஆகியோரும் சமூக சேவகர் ஏ.சீ.எம்.சஹீல் ஆகியோர் கௌரவப் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.



