சவுதியில் இலங்கையை சேர்ந்த சலீம் கொலை : பெற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சவுதியில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த ஒருவருட காலமாக சவுதி அரேபியாவில் தனியார் கம்பனி ஒன்றில் வேலை பார்த்துக்கிகொண்டிருந்த, சலீம் மொஹமெட் எனும் இளைஞர் காணாமல் போயிருந்தார். எனினும் அவருடனான தொடர்பு இல்லாமல் போனதைத் தொடர்ந்து பொற்றோர் குறித்த கம்பனியோடு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த இளைஞர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்தில் பாவனையற்று இருந்த கழிவறையில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

முன்னதாக அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அங்கு சென்ற பொலிஸாரினால் அச்சடலத்தினை அடையாளம் காண முடியவில்லை.

இந்நிலையில், ரியாத் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் குறித்த சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை என அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -