இலங்கையில் பேஸ்புக்குக்கு புதிய சட்டம்...!

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு குறைந்த பட்சமாக 18 வருட வயதெல்லையை நிர்ணயிக்கும் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை சைபர் கிரைம் அவதானிப்பு பிரிவு மற்றும் சட்ட வல்லுனர்களின் பங்கேற்புடன் இதற்கான சட்டவரைபு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக வயதுகுறைந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுக்கும் வகையில் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த சட்ட வரைபு தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -