செய்தியாளர்-எப்.முபாரக்
திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் ஒருவர் வியாழக்கிழமை(12) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை-சுஹதகம பகுதியைச்சேர்ந்த சரத் (38) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து இடம்பெற்ற இடத்தை நீதவான் பார்வையிட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆனாலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தானாகவே விழுந்து உயிரிழந்ததாகவும் சாரதி பொலிஸ் முறைப்பாட்டின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதுடன் உழவு இயந்திரத்திரத்தை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
