செய்தியாளர்-இக்பால் அலி
எகிப்து நாட்டில் நாடைபெறும் சுப்ரின் இஸ்லாமிய கவுன்சிலின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இன்று 13- 11- 2015 எகிப்து நாடு பயணமானார்.
எகிப்து நாட்டில் லக்சரில் 14 , 15 ஆகிய திகதிகளில் இரு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கலந்து கொண்டு விசேட சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
இதில் உலக முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம் சமயம் மற்றும் கலாசாரத்துறை சார் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
