இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களில் அநேகமானோர் திருடர்களாகவும் மோசடிக்காரர்களாகவுமே உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் குறித்த பொறுப்பினை, மக்களே ஏற்கவேண்டுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரு 5அல்லது6 வீதமானவர்கள் மட்டுமே நாடாளுமன்றில் இருப்பதாக தெரிவித்த அவர், அவர்களைக் கொண்டு நாட்டை முன்னேற்றுவது குறித்து தற்போது சிந்தித்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி படுதோல்வியை தழுவியிருந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.