வெள்ளத்தில் மூழ்கியது சாய்ந்தமருது எஹாட் வீட்டுத்திட்டம்! சமைத்த உணவுடன் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் முபாறக்!!



நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் பாவிக்கும் முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.

அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் சில இடங்களில் தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வொலிவேரியன் புதிய வீட்டுத்திட்டத்தின் எஹாட் வீட்டுத்திட்டம் வெள்ளத்தில் முற்றாக மூழ்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பொருட்களையும் மீட்கும் பணிகளில் சாய்ந்தமருது ஜனாஷா நலன்புரி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுப்பொதிகளை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் வழங்கி வைத்தார்.  இன்றைய இரவு உணவுகளை சாய்ந்தமருது உலமா சபையும் நாளை வர்த்தக சங்கமும் வழங்கவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எல்லைக்குள் பகல் 12 மணிவரை 78 குடும்பங்களைச் சேர்ந்த 265பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஜ. முஆபிகா தெரிவித்தார்.

மேலதிக பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் விதத்தில் முன்னெடுப்புக்களை சாய்ந்தமருது பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :