க.கிஷாந்தன்-
மலையகத்தில் 05.10.2015 இன்று காலை முதல் கன மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது.
அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கின்றனர்.
பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக வாகனத்தில் (ஹெட்லைட்) முன் விளக்கு போட்டுக்கொண்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.