மாவ‌டிப்ப‌ள்ளி பால‌ம், கிட்ட‌ங்கி போன்ற‌வ‌ற்றின் நிலை இப்போதுதான் ர‌வூப் ஹ‌க்கீமுக்கும், நிசாம் காரிய‌ப்ப‌ருக்கும் தெரிகிற‌தா என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கேள்வி



து ப‌ற்றி ஸ்ரீல‌. ஐக்கிய‌ காங்கிர‌சின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,

க‌ல்முனைத்தொகுதி ம‌க்க‌ள் எங்கும் போக‌ முடியாம‌ல் சிறை வைக்க‌ப்ப‌ட்ட‌து போல் உள்ள‌ன‌ர். மாவடிப்ப‌ள்ளி வ‌ழியால் நீர் உய‌ர்ந்து போகிற‌து.
கிட்ட‌ங்கியாலும் ம‌க்க‌ளுக்கு போக‌ முடிய‌வில்லை. வ‌ய‌ல் காணிக‌ள் வெள்ள‌த்தால் நாச‌மாகியுள்ள‌ன‌.
இந்த‌ நிலையில் முப்ப‌த்தைந்து வ‌ருட‌த்துக்கு மேல் எம்பியாக‌வும், ப‌ல‌ த‌ட‌வை அமைச்ச‌ராக‌வும் இருந்த‌ ர‌வூப் ஹ‌க்கீமுக்கு இந்த‌ பால‌ங்க‌ளின் நிலை இப்போதுதான் தெரிகிற‌தா?

இதுவெல்லாம் நாம் அறிய‌ 40 வ‌ருட‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ பிர‌ச்சினை.

இவ‌ற்றுக்கெல்லாம் தீர்வு காண‌வே ம‌க்க‌ள் முஸ்லிம் காங்கிர‌சை ப‌ல‌ப்ப‌டுத்தின‌ர். ஹக்கீமுக்கு ப‌ல‌ அமைச்சுக்க‌ள் கிடைத்த‌ன‌. ஹ‌க்கீம் க‌ட்சிக்கும் அதாபுல்லா க‌ட்சிக்கும் கிழ‌க்கு மாகாண‌ ச‌பைக‌ளில் அமைச்சு ப‌த‌விக‌ள் கிடைத்த‌ன‌.
எல்லோரும் சேர்ந்து அப்பாவி ம‌க்க‌ளை கொள்ளைய‌டித்த‌ன‌ரே த‌விர‌ இந்த‌ பிர‌ச்சினைக‌ளை பார்க்க‌வே இல்லை.

2004 தேர்த‌லில் அம்பாரை ம‌க்க‌ள் ஹ‌க்கீமுக்கு ம‌ட்டும் 80 ஆயிர‌ம் ஓட்டு போட்டார்க‌ள். ந‌ன்றி கெட்ட‌வ‌ர், இந்த‌ ம‌க்க‌ளுக்கு அத்தியாவ‌சிய‌மான‌ இவ‌ற்றை செய்ய‌வில்லை.
ம‌க்க‌ளை ஏய்த்து பிழைத்து ஏமாற்றி விட்டு இப்போது இந்த‌ அர‌சிட‌ம் பால‌த்தை க‌ட்டித்தாருங்க‌ள் என‌ நிசாம் காரிய‌ப்பரும் ர‌வூப் ஹ‌க்கீமும் கெஞ்சுகிற‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு வெட்க‌ம் ரோச‌ம் இல்லையா?

இவ‌ர்க‌ளின் க‌ட்சி அமைச்ச‌ர‌வையில் இருந்த‌ அர‌சாங்க‌த்திட‌ம் எப்போதாவ‌து இவ‌ர்க‌ள், இவ‌ற்றை கேட்டன‌ரா?

அர‌சாங்க‌ம் பால‌த்தை போட்டால் உரிமை கோர‌ ம‌ட்டும் வ‌ருவார்க‌ள் இந்த‌ எருமைக‌ள். முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியால் கிழ‌க்கு ம‌க்க‌ள் ஏமாந்த‌து ம‌ட்டும்தான் மிச்ச‌ம்.


ஸ்ரீலங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :