நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் முகாங்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்கள் அல் ஹிலால் வித்தியாலயத்திலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுப்பொதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் இன்று 2025.11.27 ஆம் திகதி வழங்கி வைத்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுப்பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல் ஜாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையிலான குழுவினர் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment