கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள்-எதிர்வரும் 06ஆம் 07ஆம் திகதிகளில்



ல்முனை, அல் ஹாமியா அரபுக் கல்லூரியில் 2026 ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

07 வருட முறையான பாடத்திட்டத்தைக் கொண்டு உலமாக்களையும் "தஹ்வா" பணியாளர்களையும் மற்றும் இளம் சமூகத் தலைவர்களையும் உருவாக்கும் பணியில் இக்கல்லூரி ஈடுபட்டு வருகிறது.

இங்கு உள்வாங்கப்படும் சகல மாணவர்களும் க.பொ.த. சாதாரண க.பொ.த உயர்தரம், அல்-ஆலிம், தர்மாச்சார்ய, அஹதிய்யா போன்ற அரச பரீட்சைகளுக்கு தயார் செய்யப்படுவர்.

அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு சர்வகலாசாலைகளிலும் மாணவர்கள் மேற்படிப்பைத் தொடரவும் வழிகாட்டப்படுகின்றனர்.

மாணவர்களின் ஆளுமை விருதிக்காக தொழிற் பயிற்சி, கணனி மற்றும் ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளிலும் கற்பிக்கப்படுகின்றது.

அல்-குர்ஆன் மனனப்பிரிவில் இணைந்து கொள்பவர்கள் அல்-குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராகவும் நல்லொழுக்கம் உள்ளவராகவும் 2026 இல் தரம் 06 சித்தியடைந்தவராகவும் 12 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

கிதாபு பிரிவில் இணைந்து கொள்பவர் 2026 ஆம் ஆண்டில் தரம் 09 இற்கு சித்தியடைந்தவராகவும் நல்லொழுக்கம் உடையவராகவும், 2026.01.01ல் 15 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 06/12/2025
 07/12/2025 ஆகிய தினங்களில் நடை நடைபெறவுள்ளன.


ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை கல்லூரி காரியாலயத்திலிருந்து பெற்று அதிபர், அல்-ஹாமியா அரபுக் கல்லூரி, வாடி வீட்டு வீதி, கல்முனை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :