வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டு நிறைவையொட்டி மு.காவினால் நடாத்தப்படும் கருத்தரங்கு!

டக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கும், கவனத்தை ஈர்;க்கும் செயலமர்வும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து பகல் 12.15 வரை கொழும்பு 07 மல்லசேகர மாவத்தை, இலக்கம் 28ஃ10 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அபிவிருத்திக்கான இலங்கை நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 'வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கான அர்த்தபுஷ்டியுடனான நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்' என்ற தலைப்பிலும், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 'அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் பற்றிய அரச கொள்கையும் அதன் பிரதிபலனும்' என்ற தலைப்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 'நல்லிணக்கம், வடபுல முஸ்லிம்களின் மீள் வருகை மற்றும் மீள்குடியேற்றம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வை' என்ற தலைப்பிலும் உரையாற்றுவதோடு, துறைசார் நிபுணர்களும், வளவாளர்களும் ஆய்வுரைகள் நிகழ்த்துவர். பரஸ்பரம் கருத்தப்பரிமாற்றங்களும் இடம்பெறும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் தொகுப்புரை வழங்குவார். 

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி நன்றி உரை ஆற்றுவார். 


எஸ்.எம்.ஏ. நியாஸ்
தலைவர் 
ஏற்பாட்டுக் குழு 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -