நகர அபிவிருத்தி அமைச்சின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துரை அபிவிருத்தி

யு.எல்.எம். றியாஸ்-

கர அபிவிருத்தி அமைச்சின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்
சம்மாந்துறை பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின்
வேண்டுகோளின் நிமிர்த்தம் இவ் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதெற்கென சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்திற்கு அண்மித்துள்ள வயல் பிரதேசத்தில் உள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பில் இவ் அபிவிருத்தித் திட்டம்
முன்னெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக சிறுவர்களின் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு பொழுது
போக்கு பிரதேசமாக இப்பிரதேசம் மாற்றியமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான முதற் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு நகர
அபிவிருத்தி அமைச்சின் உயர் மட்டக் குழுவினருடனான கலந்துரையாடல்
சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இன்
நிகழ்வில் நகர அபிவிருத்தி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர்
என்.சுரேஷ், காணி மீள் நிரப்பல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,பிரதேச
செயலாளர், மற்றும் திணைக்களத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -