அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்களுக்குப பயிற்சிப்பட்டரை!

எம்.வை.அமீர் -
ள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்த்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியான்மன்றம், உள்ளுராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்திற்கு அமைவாக மேற்படி பயிற்சிப்பட்டரை சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதி கேட்போர் கூடத்தில் 2915-05-14ல் இடம்பெற்றது.

ஆசியான்மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இன் நிகழ்வில் வளவாளராக ஆசியான்மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.சுபாகரன் மற்றும் நிதித்துறை ஆலோசகர் சீ.ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த பயிற்சிப்பட்டரையில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களினதும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களினதும் ஆய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -