போர்க் குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் ஜூன் மாதத்தில்- ஜனாதிபதி

போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு செம்டெம்பருக்குள் நிறைவடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தான் திட்டவட்டமாகக் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று இன்றுஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 'வில்பத்து சரணாலத்திலுள்ள காடுகளை அழிப்பது தவறாகும். எந்தவொரு காடும் அழிக்கப்படக் கூடாது. அதற்கு இடமளிக்கப்போவதுமில்லை. 

இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்பது உண்மை. அதற்காக காட்டுப் பகுதியை அதற்காகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது' என்று குறிப்பிட்டார். 

கடந்த அரசின் காணி விவகாரம் தொடர்பான அதிரடிப்படையின் உத்தரவுக்கிணங்கவே வில்பத்துவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார். ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -