தமிழர் பாரம்பரியத்தை மறக்காமல் சிட்னியில் களைகட்டிய சித்திரைத்திருநாள் பெருவிழா



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு ஆஸ்திரேலியா மக்கள் ஒன்றியம் தமிழர் பாரம்பரியத்தை மறக்காமல் (AusKar)நடத்திய சித்திரைத்திருநாள் பெருவிழா நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை சிட்னி லிட்டன் ஸ்ட்ரீட் பார்க் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஒஸ்கார் அமைப்பின் நடப்பாண்டுத் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

அதிதிகளாக ஒஸ்கார் அமைப்பின் போசகர்களான சிட்னியில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை நிறுவிய உதயசூரியன் நாகமணி குணரெட்ணம், முன்னாள் பட்டய கணக்காளர் ரி.பிரகதீஸ்வரன், முன்னாள் பொறியியலாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு பெருமக்கள் அனைவரும் பங்கு பற்றினார்கள்.
நான்கு மணி நேரமாக ஒரே குதூகலமாக நடைபெற்ற அந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிசுகள் வழங்கப்பட்டதாக ஒஸ்கார் செயலாளர் திருச்செல்வம் லாவண்யன் தெரிவித்தார்.





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :