குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் தேசிய நிகழ்வு
அஸ்ஹர் இப்றாஹிம்-
னாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் நிதி பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கான இலவச அரிசி வழங்கும் ஆரம்ப நிகழ்வானது மன்னார் நகர பிரதேச செயலாளர் திரு.எம். பிரதீபன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட "பெரியகடை " சன சமூக நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கெளரவ மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணகேஸ்வரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பங்கேற்போடு இந்நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :