வாழ்வின் எழுச்சி திரிய சவிய கடன் திட்டம்!

நிஸ்மி, அக்கரைப்பற்று-

குறைந்த வருமானத்தைக் கொண்ட வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி திரிய சவிய கடன் திட்டத்தின் கீழ் வங்கி அங்கத்தவர் அல்லாதவர்களுக்கு 100,000.00 ரூபா கடன் வழங்குவதை உடன் நிறுத்தி வங்கி அங்கத்தவர்களுக்கு திரிய சவிய கடன் வழங்கும் செயற்றிட்டத்தைத் துரிதப்படுத்துமாறு இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தைக் கோரும் மகஜர் ஒன்றினை அகில இலங்கை சமுர்த்த்p அபிவிருத்தி மற்றும் விவ

சாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்களின் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.
வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி திரிய சவிய கடன் திட்டத்தின் கீழ் வங்கி அங்கத்தவர்களுக்கு 100,000.00 ரூபா கடன் வழங்குமாறு DDD/HO/ME/O இலக்க 06.03.2015 திகதிய கடிதத்தின் மூலம் ;அறிவிக்கப்பட்டிருந்தது

அகில இலங்கை சமுர்த்த்p அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்களின் சங்க பிரதான தலைவர் கீத்சிறி கமகே ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறைந்த வருமானத்தைக் கொண்ட வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்திப் பயனாளிகளால் 1995 ஆம் ஆண்டிலிருந்து சிறுகச் சிறுக சேமிக்கப்பட்டதும் நாடளாவிய ரீதியில் உள்ள 1070 சமுர்த்தி வங்கிச் சங்கங்களில் இருப்பாக உள்ள பல மில்லியன் ரூபாக்கள் குறைந்த வருமானத்தைக் கொண்ட வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் (சமுர்த்திப் பயனாளிகள்) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மாத்திரமே பயன்படுத்தவேண்டும் மாறாக தமது சொந்த அரசியல் காரணங்களுக்காக வங்கியில் அங்கத்தவர்களாக இல்லாத மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் அல்லாதவர்களின் பொருளாதாரத்தை வளர்க்கப் பயன்படுத்த முடியாது.

குறித்த கடிதத்தில் நான்காம் பந்தியில் குறிக்கப்பட்டுள்ள விதிகள் தகுதிகள் புறக்கணிக்கப்பட்டு; இக் கடன்கள் வழங்கப்படுவதை நிறுத்தி விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என்றும் தகுதிகள் புறக்கணிக்கப்படடு குறுகிய தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த வங்கிகளின் வளங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், தொழற் சங்க நடவடிக்கை காரணமாக சமுர்த்திப் பயனாளிகள் அல்லாதவர்களின் கடன் அனுமதிப் பத்திரங்களை அனுமதிப்பதிலிருந்து விலகியிருக்கும் எமது சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வேண்டாம்எனவும், இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் வறிய அப்பாவிகள் சேமி;த்த பணத்தை வீணாக்க வேண்டாம் எனவும், கட்டாயம் இவ்வாறான கடன்களை வழங்க வேண்டுமாயின் சரியான நடைமுறை மற்றும் ஆலோசனைகளைப் பேச்சு வார்த்தை நடாத்தி அவற்றை அனுமதித்த பின் வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும், இந்த கடன் முறையை முன்னெடுத்து மெது சங்க அங்கத்தவர்களுக்கு அநீதி ஏற்படுத்தப்பட்டால் கடுமையான தொழிற் சங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அந்த மகஜரில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் புறக்கணிக்கப்படடு குறுகிய தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த வங்கிகளின் வளங்கள் பயன்படுத்துவதை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு

உதவ வேண்டாம் எனவும் அவ்வாறான செயற்படும் அங்கத்தவர்கள் மீது சங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் என்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்களின் சங்க பிரதான தலைவர் கீத்சிறி கமகே தெரிவித்துள்ளார்.

மகஜரின் பிரதிகள் அமைச்சின் செயலாளர், அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதான செயலாளர்கள், துணை ஆணையாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -