"வெள்ளை நிற மல்லிகையோ..." பாடலுக்கு நடனமாடி அசத்திய யாழ் பல்கலை மாணவி தக்ஷாளினி



வி.ரி.சகாதேவராஜா-
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் இயற்றிய
"வெள்ளை நிற மல்லிகையோ..." என்ற முத்தான பாடலுக்கு நடனமாடி அசத்தினார் காரைதீவைச் சேர்ந்த யாழ். பல்கலை மாணவி ஜெயகோபன் தக்ஷாளினி .
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் விபுலானந்தர் ஞாபகர்த்த பணி மன்றமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாவின் போது வழங்கிய “ஈசன் உவக்கும் நின் மலர்கள் மூன்று” நடன நிகழ்வின்போதே இவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது. பலரது பாராட்டையும் பெற்றது.

இந்த நடனத்திற்கு ஆடல் நெறியாள்கை & நட்டுவாங்கம்: திருமதி.சர்மினி சுதாகரன் பாடல் : திருமதி.ஜெயகணேஷ் புவனேஸ்வரி
மிருதங்கம்: பிரமின்சர்மா விக்னேஸ்வரன் ஆகியோர் பக்கபலமாக விளங்கினர்.

இந்த நிகழ்வு காரைதீவு சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றமை தெரிந்ததே.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :