தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் அன்பளிப்புல்கலைக்கழகத்தை சமூகத்துடன் இணைத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக பொதுநூலகங்களை வலுவூட்டல் திட்டமானது பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படுகின்து. இதற்காக SERLIN தென்கிழக்குப்பிராந்திய நூலக தகவல் வலையமைப்பானது பெரும் பங்காற்றி வருகின்றது.

இந்த வகையில் உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி சிறப்பித்தது. இதற்கான நூல்களை அவுஸ்த்திரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.

இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது. அனைத்து நூலகளும் இப்பிரதேசத்திலுள்ள 25 பொதுநூலகங்களுக்கும் 55 பாடசாலை நூலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்நூல்களின் மொத்தப்பெறுமானம் சுமார் 08 மில்லியன் ரூபாய்கள் ஆகுமென சிரேஷ்ட உதவி நூலகரும் வெளிக்கழப்பயிற்சி இணைப்பாளருமான எம்.சி.எம்.அஸ்வர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பின்வரும் நூலகங்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டன.

1. நிந்தவூர் பொது நூலகம்

2. சாய்ந்தமருது பொது நூலகம்

3. வாசிப்பு நிலையம் வீரமுனை

4. பொது நூலகம் ஒலுவில்

5. அல்ஹம்றா வித்தியாலயம் ஒலுவில்

6. சம்மாந்துறை அமிர்அலி வித்தியாலயம்

7. மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை

8. அட்டாளைச்சேனை பொதுநூலகம்


இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்,கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பிரயோக விஞ்ஞான பீடத்தில் பீடாதிபதி கலாநிதி எச்.எம். ஹாறுன் நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் பதிவாளர் நிதியாளர் உட்பட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :