பொறல்ல பள்ளிவாயல் மீது சற்றுமுன் தாக்குதல்!

பொறல்ல ஜாமியுல் அல்பார் பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட தாக்குதலினால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அவ்விடத்தில் காணாமல் போன ஆட்டோ ஒன்றை தேடிய குழு ஒன்று பள்ளிவாயல் CCTV வீடியோ ஒளிப்பதிவுகளை கோரியதாகவும், பள்ளி நிர்வாகம் சீசீடிவி இயங்கவில்லை என்று சொன்னதாகவும் தெரிகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது அங்கு சுமூகமான நிலையே காணப்படுகின்றது.

சப்னி-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -