கல்வீச்சுக்குப் பிற்பாடு பொறளை பள்ளிவாயல் வீடியோ!

அஹமட் இர்ஷாத்-
பொறளை ஜும்மா பள்ளிவாயலின் வீதி முகத்தோற்றத்திலுள்ள பளிங்குகளிலான ஜன்னல் கண்ணாடிகள் நேற்று 30.05.2015 மாலை 10.45 மணியளவில் இனம் தெரியாதோரினால் கல்வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்த குறித்தபள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ரிக்காஸ் ஹாஜி கருத்துத் தெரிவிக்கையில்;

10.45 மணியளவில் இச்சம்மபவ்ம் இடம் பெற்றுள்ளதாகவும், கல்வீச்சினை நடத்துவதற்காக வந்திருந்தவர்கள தங்களது முகத்தினை மூடியவர்களாக காட்சியளித்தாகவும் தெரிவித்தார்.

மேலும் சம்பவ இடத்துக்கு உடனடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த மேல்மாகாண சபை உறுப்பினரான பைரூஸ் ஹாஜி இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நாட்டில் இனவன்முறைகளை தூண்டி அரசியல் நாடகங்களை அரங்கேற்றும் நடவடிக்கைகளாக கூட இருக்கலாம் என்ற கருத்துடன் முஸ்லிம்களை பொறுமை காக்குமாறும் வேண்டிக் கொண்டதோடு, காலையில் பள்ளிவாயலுக்கு முன்பாக முச்சக்கர வண்டி நடத்துனர்களிடம் இடம்பெற்ற வாய்த்தாக்கம் சம்பந்தமாக பொலிசாரினை விசாரிக்குமாறு பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் அரசியல் நடவடிக்கைகளை பார்க்குமிடத்து மீண்டும் நாட்டில் இனவாதத்தினை தூண்டிவிட்டு அதில் அரசியல் காய்களை நகர்த்தும் திட்டங்களையே செயற்படுத்தி வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது என தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எது எப்படி இருந்தாலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தன்டனையினை பெற்றுக்கொடுப்பதானது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -