பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா? அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா? என்பவற்றில் ஒன்றை தெரிவு செய்யுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தான் இருக்கும் வரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஜனாதிபதி எதுவித எதிரப்பையும் தெரிவிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ச
