யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதல் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் செய்தமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தெரண ச
காலை இடம்பெற்ற சம்பவம்:
புங்குடுதீவு மாணவி படுகொலை குற்றவாளிகளை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வந்தவேளை அங்கு வீதியின் அருகில் கூடியிருந்த இளைஞர்கள் சத்தமிட்டபடி நீதிமன்றத்தை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முற்பட்டனர். இதனையடுத்து விஷேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டதோடு, சம்பவத்தில் சில பொலிஸார் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ச





