நேபாள அனர்த்தம் ; முதலமைச்சரின் அனுதாப செய்தி

நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் பொதுவாக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கும் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அநுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையே நெருங்கிய நற்புறவு காணப்பட்டு வருவதாகவும் இலங்கையில் அரசியல் பொருளாதார கலாச்சார சூழலைப்புரிந்து கொண்டு நேபாளம் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்துள்ளதையும் அவர் நினைவு படுத்தியுள்ளார். 

சுனாமி உற்பட இலங்கையில் ஏற்பட்ட அழிவுகளின் போதும் நேபாளம் தன்னால் முடிந்தவரை இலங்கைக்கு உதவி பிரிந்துள்ளதாகவும் அதேபோன்று நேபாளத்தில் பல்வேறு பிரச்சனைகளில் இலங்கை கைகொடுத்து உதவியதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் நேபாள அனர்த்தத்தில் சிக்குண்ட மக்களை மீட்டெடுப்பதற்காக அந்த நாட்டுக்கு மீட்புப்பணியாளர்களையும், வைத்தியர்களையும், நிவாரணத்தினையும் இலங்கை அரசு அனுப்பிவைத்துள்ளமைக்கு இந்த அரசின் ஆட்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனது நன்றியினை ஜ்னாதிபதிக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பாதிக்கக்கப்பட்ட நேபாள அரசுக்கும் குடும்பங்களை இளந்த மக்களுக்கும் தனது ஆழ்ந்த அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அநுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -