வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் சத்துணவு வழங்கும் நிகழ்வு!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
ரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வாகரை, சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வாகரைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கிராமிய மின்சார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், வாகரைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எஸ்.கே.ஏ.பி.திசாநாயக்க, அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மொத்தம் 1000 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென பிரதேச செயலாளர் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -