மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் தும்பங்கேணி பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக 04 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கச்சக்கொடி சுவாமிமலையில் இருந்து, களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த பஸ்சின் டயர் கழன்றதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -