பரூக் சிஹான் -
யாழ். இணுவில் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (16) இடம் பெற்ற வாகன விபத்தில், ஏழாலை மயிலணியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன்; எதிரே வந்த 'கயஸ்' ரக வாகனம் மோதியுள்ளது. வேகமாக வந்த 'கயஸ்' ரக வாகனம் திடீரென நிறுத்த முற்பட்ட நிலையில், வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிளுடன் மோதியது எனவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.