நெல் அரிசி உற்பத்தி சந்தைப்படுத்தல் ஏகபோகத்தை ஒழிக்க வேண்டும்..! EP CM கவனத்திற்கு!




மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

டந்த ஆட்சிக் காலத்தில் அரிசி உற்பத்தியில் இந்த நாடு தன்னிறைவு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அதேபோன்று முன்னேற்றமும் காணப்பட்டது, என்றாலும் நெல் விவசாயிகளுக்கு உரிய விலையை பெற்றுக் கொள்வதில் பெரும் போராட்டங்கள் இடம் பெற்றன,

நெல் கொள்வனவு, களஞ்சியப்படுத்தல்,அரிசி ஆலைகள், மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற இன்னோரன்ன துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் வர்தகர்களது தொழில் முயற்சிகளுக்கு திட்டமிட்டு சாவு மணி அடிக்கப்பட்டது.

இடைத்தரகர்கள் ஒரு சிலர் ஊக்குவிக்கப்பட்டு நெல்கொள்வனவு , களஞ்சியப்படுத்தல், அரிசி ஆலைகள் , சந்தைப்படுத்தல் என சகல அம்சங்களும் ஒரு சில அரசியல் செல்வாக்குமிக்க அடிவருடிகளின் ஏக போகமாக மாற்றப்பட்டது, விவசாயிகளிடம் 30 ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசியாக சந்தைப்படுத்தப் படும் பொழுது 80 -100- 120- 140 ரூபாய்களாக கொள்ளை இலாபமீட்டப்பட்டது.

தற்போதைய அரசு இதற்கான ஆக்கபூர்வமான தீர்வை முன்வைக்க வேண்டும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் ஊக்குவிக்கப்படல் வேண்டும் குபேரார்களிடம் இருந்து இந்த பிரதான துறையின் ஏகபோகம் மீட்டேடுக்கப்பாடல் வேண்டும்.

இந்தக் குபேரர்களை ஜனாதிபதி மைத்ரியும் அறியாதவர் அல்ல.

கிழக்கு மாகாண அரிசியல் வேண்டும் அரசியல்....

கிழக்கு மாகாணத்தில் சிறு போக நெல் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், வெளிமாவட்ட கொள்வனவாளர்கள் கூடிய விலை கொடுத்து மொத்தமாக உடனுக்குடன் நெல்லை வாங்குவதனால் கிழக்கு மாகாண செங்கற் சூழைகளை நடத்தவோர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் தாம் நடத்தும் செங்கற் சூழைகளுக்கு எரிபொருளாக நெல் உமி தேவைப்படுவதாகவும் இவ்வாறு மொத்தமாக நெல் வெளியே செல்வதனால் குறிப்பிட்ட தொழில் நடத்துனர் மாத்திரமன்றி தொழிலாலாரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணிகளில் ஒன்று தற்போது துரித கதியில் அபிவிருத்தி காணும் பாதைகளும் உற்கட்டமைப்ப்பு வசதிகளுமாகும்.

அண்மைக்காலமாக நெல்லை கொள்வனவு செய்வதிலும் கள்ஞ்சியப்படுத்துவதிலும், அரிசி ஆலைகள் நடாத்துவதிலும் அரசியல் செல்வாக்குடன் கூடிய ஏக போகங்கள் அதிகரித்ததனையும், உற்பத்தியாளர்களை விட சந்தைப்படுத்தல் மொத்த வியாபாரத்தில் கொள்ளை இலாபம் ஈட்டப்பட்டு வருவதனையும் நாம் அறிவோம். உற்பத்தியாளரும் நுகர்வோரும் அரிசி வியாபாரத்தில் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை.

பெரிய அளவில் வெளிமாவட்டங்களில் களஞ்சிய சாலைகளுடன் அரிசி ஆலைகளை நடத்துவோறின் படையெடுப்பு கிழக்கு மாகாண விவசாயிகளின் பொருளாதாரத்தில் அசாதாரண சமநிலையை ஏற்படுத்துமாயின் மாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சு அதற்கான ஒரு தீர்வை அவசியம் காண வேண்டும்.

பாரம்பரிய நெசவுத் தொழிலை காலத்திற்கு உகந்த விதத்தில் மாற்றங்களுக்கு உள்ளாக்கிய மட்டுப்படுத்தப் பட்ட முன்னெடுப்புக்கள் போன்று கூட்டுறவு அடிப்படையிலாவது சிறிய சூழைகலை நடாத்தும் தொழில் முயற்சியாளருக்கும், தொழிலாளருக்கும் களஞ்சியசாலை வசதிகள், கொள்வனவிற்கான கடனுதவிகள் பெற்றுக் கொடுக்கப் படுவதோடு பிராந்தியத்தில் பிற மாவட்ட ஆலைகளுடன் போட்டியிடக்கூடிய அரிசி ஆலைகளையும், சந்தைப்படுத்தல் வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது மாகாண அரசின் கடமையாகும்.

எடுத்த எடுப்பில் தற்காலிகமாக இந்த விவகாரத்தை கையாள முடியாது மாறாக துறை சர் நிபுணர்கள், விவசாய தொழில் முயற்சியாளர்கள், பிராந்தியத்தில் உள்ள கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல் முகவர்கள் என பலரையும் அழைத்து ஒரு மூலோபாய திட்டமிடலின் கீழ் மிகச் சிறந்ததும் நிலையனதுமான ஒரு தீர்வு பெற்றுத் தரப்படல் வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நண்பர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களே உங்கள் கவனத்திற்கு..இதுகுறித்த உங்கள் எதிரொலியை எதிர்பார்த்து நிற்கின்றோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -