இவர்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் வீட்டு ஓட்டுனர்களாக (HOUSE DRIVER) பணிபுரியும் ஆண்கள்
எஞ்சிய ஐந்து இலட்ச்சம் பேர் பணி பெண்கள்
இந்த பணிபெண்கள் சவுதியில் வீட்டு வேலை செய்வதர்காக இந்தியா இலங்கை இந்தோனேஷிய பிலிப்பைன் எத்தியொப்பிய போன்ற நாடுகளில் இருந்து வர வழைக்க பட்டவர்கள்
இஸ்லாமிய நாடாக இருக்கும் சவுதி அரேபியா பணிபெண்களை வரவழைக்கும்விசயத்தில் இஸ்லாமிய வழி காட்டுதலுக்கு எதிராகவே நடந்து வருகிறது
நமது விட்டு வேலைகளை நமது விட்டு பெண்களே செய்ய வேண்டும் அதர்கு உறுதுணையாகவும் உதவியாகவும் ஆண்களாகிய நாம் இருக்க வேண்டும் இது தான் நபிகள் நாயகம் நமக்கு கர்பித்து தந்த நடைமுறை
நபிகள் நாயகம் பல மனைவிகளோடு வாழ்ந்தும் எந்த மனைவிக்காகவும் பணி பெண்களை நியமித்தது இல்லை
அவர்கள் வீட்டு வேலைகளை அவர்களது மனைவிமார்களே செய்து கொள்வார்கள்
அதர்கு நபிகள் நாயகம் துணையாக உதவியாக இருப்பார்கள்
பணிப்பெண்களை கொண்டு வருதின் மூலம் மற்றோரு முக்கியமான இஸ்லாமிய வழிகாட்டு தலும் மீறப்படுகிறது
பருமடைந்த பெண்கள் உரிய ஆண்துணையின்றி பயணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ள நிலையில் விட்டு வேலைக்காக நாடுவிட்டு நாடு வரும் பெண்கள் இந்த நடைமுறையை மீறுகின்றனர்
அவர்களை வரவழைப்பவர்களும் இந்து குற்றத்தில் பங்காளிகளே
பெண்கள் விசயத்தில் தெளிவான வழிகாட்டு தலை இஸ்லாம் வழங்கி இருக்கும் நிலையில்
இந்த தெளிவான வழிகாட்டு தலை மீறிவிட்டு பணம் இருக்கிறது என்பதர்காக ஏழை நாடுகளில்இருந்து பருவ பெண்களை வேலைக்காக இறக்கு மதி செய்துள்ள சவுதி இப்போது அதர்குரிய தண்டனையை அனுபவிக்க தொடங்கியிருக்கிறது
பணிபெண்களாக வரகுடியவர்கள் ஆங்காங்கே வன்முறையில் இறங்குவதை கண்டு சவுதி அறிஞர்களும் எழுத்தாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்
தாயிப் நகரில் ஒரு பணி பெண் தமது முதலாளிய கத்தியால் குத்தி கொன்றது
தபுக்கில் ஒரு பணி பெண் தனது எஜமானியின் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்றது
சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் பணி பெண்களால் வீட்டு பெண்கள் தாக்க படுவது
போன்ற நிகழ்வுகளால் சவுதி அரேபியாவின் அறிஞர் உலகம் ஆடி போய் உள்ளது
அந்த அறிஞர்களில் ஒருவர் தெளிவாக பின் வருமாறு கூறினார்
அன்னிய பெண்களை வெளி நாடுகளில் இருந்து அழைத்து வருவதின் மூலம் இஸ்லாமிய நடைமுறைகளை நாம் மீறுவதால் தான் அதர்கு உரிய தண்டனையை நாம் அனுபவிக்க நேரிடுகிறது
இஸ்லாமிய வழிகாட்டு தல்கள் ஆயிரம் அற்தங்கள் பொதிந்தவை
மனித மன ஓட்டங்களை நன்கு அறிந்த இறைவன் தந்துள்ள அந்த சட்டங்களை நாம் மீறுவதால் இழப்பு நமக்கே தவிர இஸ்லாத்திர்கு அல்ல
எனவே இனி வரும் காலங்களில் பணி பெண்கள் இல்லாத இஸ்லாமிய குடும்பங்களை கட்டி எழுப்புவோம் இஸ்லாமிய நடைமுறைகளை நடைமுறை படுத்துவதின் மூலம் நமது பாது காப்பை நாம் உறுதி செய்வோம் என அந்த அறிஞர் கூறியுள்ளார்
இந்த நேரத்தில் இந்தியா மற்றும் இலங்கையை சார்ந்த என் அன்பு உறவுகளுக்கு ஒரு அண்பான வேண்டுகோள்
நமது நாடுகளில் இருந்து பணி பெண் வேலைக்காக வரும் எந்த பெண்ணும் மனம் விரும்பி அந்த பணிக்காக வருவதில்லை
குடும் சூழலால் நிர்பந்திக்க பட்டே அந்த பணிக்கு வருகின்றனர்
ஆதரவு இல்லாத பெண்கள்
கணவனால் கைவிட பட்ட பெண்கள்
வாழ வழியின்றி தவிக்கும் பெண்கள்
உற்றார் உறவினரின் உதவி இன்றி பரிதவிக்கும்
பெண்கள்
இப்டி பட்டவர்கள் தான் தங்களை காப்பதர்காகவும் தங்கள் குழந்தைகளை வழர்ப்பதர்காகவும் பணி பெண்கள் வேலைக்கு வருகின்றனர்
என் அன்பிர்கு உரிய ஆண் சமுதயமே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்
எந்த குடும்ப சுமையையும் பெண்ணின் மீது இஸ்லாம் சுமத்தவில்லை
மனைவியாக இருக்கும் பெண்ணை கணவன் கவனித்து கொள்ள வேண்டும் தாயாக இருக்கும் பெண்ணை மகன் கவனித்து கொள்ள வேண்டும் சகோதிரியாக இருக்கும் சகோதரன் கவனித்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைகிறது
இந்த கவனிப்புகளில் நாம் குறை செய்வதால் தான் நமது சமூதாய பெண்கள் வெளி நாடுகளை நோக்கி படை எடுக்கும் அவலம் தோன்றுகிறது
எனவே இது பெண்ணின் குற்றமல்ல ஆணின் குற்றம் ஒரு பெண் பணி பெண்ணாக வெளி நாடு வருகிறாள் என்றால் அவளது குடும் உறுப்பினர்னளில் உண்டான கணவனோ தந்தையோ சகோதரனோ தமது பொறுப்பை தட்டி கழித்துள்ளனர் என்று பொருள்
ஆண் சமூதாயமே உங்கள் பொறுப்பில் உள்ள பெண்கள் விசயத்தில் இறைவனைஅஞ்சி கொள்ளுங்கள்.
உண்மைதமிழன்-
