அஸ்ரப் ஏ சமத்-
மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ அமைப்பினால் மாளிகாவத்தை, கிராண்பாஸ் அன்டி வாழும் இளம் முஸ்லீம் பெண்களுக்கு 6 மாத கால தொழிற்பயிற்சி நெறிகளை நடாத்தி பயிற்சியளித்து சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.
இங்கு கனணி, தையல், ஆங்கில பேச்சு, துணிவகைகளில் பூப்போடுதல், தஜ்வீத் வகுப்புக்கள் நடாத்தப்பட்;டு வருகின்றன. இப் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்த 150க்கும் மேற்பட்ட முஸ்லீம் இளம் பெண்கள் தங்களது பயிற்சியை முடித்து மீள வீட்டிலேயே நாங்கள் தங்கி நிற்க வேண்டியுள்ளது.
நாங்கள் கற்ற இந்த சுயதொழில் பயிற்சியினால் எமது உற்பத்திகளை சந்தைப்படுத்தல், கொள்வனவு செய்தல் அல்லது இத்துறையில் ஏதாவது அரச தணியார் துறையில் தொழிலொன்றை பெற வாய்ப்பளிக்கப்படுவதில்லை. ஆகக்குறைந்தது எங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு ஒரு விற்பணை நிலையமொன்றாயாவதை ஏற்படுத்தித் தாருங்கள். என வேண்டுகின்றனர். நாங்கள் இப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியுள்ளது.
எங்களது ஏழைக்குடும்பங்களுக்கு ஏதாவதுதொரு சுயதொழில் வருமானம் இருக்குமானால் எங்களது வாழக்கைச் செலவை சமாளித்துக் கொள்ள முடியும.; இல்லாவிட்டால் நாங்களும் வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளையே நாட வேண்டியே வரும். இவ்வாறு கொழும்புப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டில் வாழ்ற்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் கூறுகின்றனர்.
மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏயில் 6 மாதகால பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்த முஸ்லிம் பெண்களது உற்பத்திகள் மற்றும் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் புதிய கனணி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு வை.எம்.எம்.ஏ யில் நடைபெறற்து. இந் நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வரின் மனைவி பெரோசா முசம்மில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர், கலாநிதி ஹரிஸ்டீன், வை.எம்.ஏ தலைவர் முஹம்மத் ஆகியோறும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)