என்னை குர்பான் கொடுப்பதால்தான் பிரதேசவாத அரசியல் ஒழிக்கப்படுமாயின் அதற்கு நான் தயார்- சிப்லி பாரூக்

அஹமட் இர்ஸாட்-

பிரதேசவாத அரசியல் என்பது நிச்சயமாக ஒழிக்கபட வேண்டிய விடயமாகும். அது சம்பந்தமாக நான் அடிக்கடி எனது நண்பர்களிடத்தில் கூறிக்கொள்வதாவது என்னை குர்பான் கொடுத்தால்தான் (அதாவது ஒருவரை பலியிடுவது) பிரதேசவாத அரசியல் ஒழிக்கப்படுமாயின் அதற்கு நான் தயார் எனவும், அதனால் மூன்று ஊர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் அதற்கான எல்லாவகையான தியாகங்களையும் நான் செய்யத்தயாராக உள்ளதாக பலமுறைகள் கூறியுள்ளேன். 

ஆகவே நான் இன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் அரசியலில் காத்தான்குடியாக இருக்கலாம், ஏராவூராக இருக்கலாம் அல்லது கல்குடாவாக இருக்கலாம் பிரதேசவாதம் எனும் அரசியல் ஒழிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவப் படுத்துகின்ற எங்களுடைய முஸ்லிம் சகோதரர் என்ற வகையில் மூன்று ஊர் மக்களும் ஒருவரிடத்தில் சென்று தங்களுடைய அரசிய சார்பான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் படியான அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக செயற்படும் படியாக உறுவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் என்னிடம் மாற்றுக்கருதில்லை என்பதுடன், முன்று ஊர்களைச் சேர்ந்த மக்களும் இதற்காக ஒருமித்த குரலுடன் உழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.

இவ்வாறு இணைய நாளிதல் வாசகர்களுக்காக கேட்பப்பட்ட கேளிவியான மட்டக்களப்பு பிரதேசமான காத்தான்குடி ,ஏராவூர், கல்குடா பிரதேசங்களில் பிரதேசவாத அரசியல் தலைவிரித்தாடுவதற்கு 1989ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வாக்குறுதியை மீறியதே முக்கிய காரணமாகும் என ஓட்டமாவடியில் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கூட்டத்தில் மிக தைரியமாக உரையாற்றினீர்கள். 

அந்த வகையில் இஸ்லாமிய கோட்பாட்டடிபடையில் வளர்ந்து வரும் இளம் அரசியல் வாதி என்ற முறையில் நீங்கள் பிரதேசவாத அரசியலுக்கு எதிராக எதைச்சொல்ல விரும்புகின்றீகள் என்ற கேள்விக்கே மேற்கண்டவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய சிந்தனை கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வருகின்ற இளம் அரசியல்வாதியான சிப்லி பாரூக் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் ஒரு பிரதி நிதித்துவத்தை பெறுவது என்பது மூன்று ஊர்களும் ஒற்றுமைப்பட்டு செயற்படாவிட்டால் அது இல்லாமல் போகலாம் என்ற சந்தேகம் உறுவாகியுள்ளது. 

ஏனென்றால் கடந்த காலத்தில் அதாவது 2010ம் ஆண்டு ஜானாதி தேர்தலில் 67000 தமிழ் மக்களும்,மாகாண சபையில் 107000 தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர், ஆனால் கடைசியாக இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 160000பேர் வாக்களித்துள்ளனர். 

அந்தவகையில் பார்க்கின்ற பொழுது எமது பிரதிந்தித்துவத்தை பெற்றுக் கொள்வதற்கான வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனால் மூன்று ஊர்களும் ஒற்றுமைப்பட்டு விட்டுக்கொடுப்புடன் யாரக இருந்தாலும் அந்த சகோதரர் நம்பிக்கைக் குறியவாரா? என்பதனை முக்கியமாக கருத்தில் கொண்டு அவருக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என்ற வகையில் அவருடன் பல ஒப்பந்தங்கள், சத்தியங்கள் செய்து ஒரு புதிய தலமைத்துவத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

சென்ற காலங்களிலும் இவ்வாறான சதியங்கள் செய்து எமது சமுகம் ஏமாற்றப் பட்டதனால்தான் பிரதேசவாதம் தலைதூக்கியுள்ளது என்பதனை முக்கியமாக கருத்தில் கொண்டு இதற்குப் பிறகு அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்காக புதிய தலைமுறைக்கு கொடுப்பதால்தான் மூன்று ஊர்களையும் ஒற்றுமைப்படுத்திய நல்லதோர் புதிய அரசியல் கலாச்சாரத்தை உறுவாக்கலாம் என்ற நம்பிக்கை அடிபபடையில் இந்த பிரதேசவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்காலதில் எமது மாவட்டத்தில் உள்ள மூன்று ஊர்களான காத்தான்குடி, கல்குடா, ஏராவூர் மக்கள் பிரதேசவாத அரசியலில் பிரிந்து நிற்காமல் மட்டகளப்பு மாவட்ட முஸ்லிம்கள் என்ற தோரணையில் ஒன்று பட்டு நிற்க வேண்டும். 

அதற்காக எந்த வகையான தியாகங்களை செய்யமுடியுமோ அதற்கு நான் தயாராக உள்ளதாகவும், அதனோடு எதிர்காலத்தில் எனது அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக கல்குடா, ஏராவூர், காத்தான்குடி பிரதேசங்களில் பிரதேச வாதத்தை தூண்டி வாக்குகளை பெற்றுக்கொள்ளவோ அல்லது பிரதிநித்துவத்தை அடைந்து கொள்வதற்கோ முயற்சிக்க மாட்டேன் என கூறிக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேல்விகளான....
01 நீங்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொள்ளப்போவதாக மாவட்டத்திலும் தேசியத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது இது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?

02. பெளத்தர்களை பெரும்பான்மையாக கொண்டு பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் அரசியல் ரீதியாக நடைபெறுகின்ற விடயங்களில் இஸ்லாமிய சட்டதிட்டகளை முழுமையாக கொண்டு உங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் காணக்கூடியதாக உள்ளது.இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன?

03. இன்றைய தமிழ் நாளிதலான செரண்டிப் பத்திரிகையில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அறிக்கையான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இருந்து அரசியல் முகவரி பெற்றதற்குப் பிறகு துரோகமிழைக்கும் படலம் ஆரம்பமாகின்றது எனவும், அதற்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருப்பதானது மறைமுகமாக உங்களையா குறிப்பிடுகின்றார்? அவ்வாறு அவர் உங்களை குறிப்பிட்டால் அதற்க்கான உங்களுடைய பதில் என்ன?

04. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கின்ற மக்களுக்கும், அதே நேரத்தில் உங்களின் அரசியல் முன்னெடுப்புக்களுக்காக நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து புதிய மாற்றத்துடனான இளைஞர் அணி உங்களின் எதிர்கால வெற்றிக்காகவும், அதையும் தாண்டி ஏராவூர், கல்குடா பிரதேசத்திலும் உங்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்படுகின்றது. இது சம்பந்தமாக நீங்கள் அரசியல் ரீதியாக எவ்வாறான முடிவினை எடுக்கப் போகின்றீர்கள் என இவ்வாறக அதிகரிக்கின்ற உங்கள் ஆதரவாளர்களுக்கு என்ன செய்தியினை சொல்ல விரும்புகின்றீர்கள்?

இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கூறிய கருத்துக்களின் காணொளியும், விலாவாரியான முறையில் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -