ஸ்ரீ.மு.காங்கிரஸ் கட்சிக்காய் வாக்குச்சாவடிகளுக்குச்சென்றோருக்கு அட்டாளைச்சேனையில் பாராட்டு










பைஷல் இஸ்மாயில் –

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய எ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை மீலாத் நகர் அல் ஜெஸீறா வித்தியாலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், ஐ.எல்.நஸீர், மு.காவின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர், உயர்பீட உறுப்பினர் யூ.எல்.வாஹிட், அல் ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக பல தியாகங்களையும் தேர்தல் காலங்களில் கட்சியின் வெற்றிக்காக வாக்குச் சாவடிகளில் தேர்தல் முகவர்களாகவும் செயற்பட்ட சுமார் 80 போராளிகளை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய எ.எல்.எம்.நஸீர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 250 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு பகல் உணவு வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -