இந்த ஊடக செயலமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தளங்களில் ஆவர்முள்ளவர்கள், செய்தி இணையத்தளங்களை நடாத்துவோர், டுவிட்டர் சேவைகளை நடாத்துவோர் மற்றும் ஊடகத்துறையில் ஆவர்வமுள்ள மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ள முடியும். இச்செயலமர்வில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்துகொள்ள முடியும்.
மார்ச் மாதத்தில் வார இறுதி நாளில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை இச்செயலமர்வு நடைபெறும். இதில் கலந்துகொள்வோருக்கு போக்குவரத்துச் செலவு, உணவு மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படும்.
இதற்கு பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், உங்களது விண்ணப்பங்களை மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்ககூடிய வகையில் அனுப்பிவைக்கவும். அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்த தலைநகரைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்படும்.
விண்ணப்பங்களுக்கு இதனை கிளிக் செய்யவும்..
மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் (பகல் வேளைகளில் மாத்திரம்) 0777731180 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். அல்லது thuruvamnews@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.
.jpg)