MY3 அரசில் விமானத்தில் சுற்றிய அமைச்சரின் பதவிகள் பறிக்கப்பட்டன- அதிர்ச்சித்தகவல்

மைத்திரி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் விசேட விமானம், மற்றும் உலங்குவானூர்திகளில் வலம் வந்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

இராணுவத்துடனான சந்திப்பு என கூறி மூன்று உலங்குவானூர்திகளில் 4 நாட்கள் வலம் வந்தார். 
இதனால் அரசின் செலவு முன்னைய அரசாங்கம் போன்றே காணப்பட்டது. தேர்தலின் போது இவ்வாறான பந்தா அரசியல் தமது அரசில் இடம்பெறாது என மைத்திரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரியால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடற் படையணி ஆகிய துறைகளை கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.எதிரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -