அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து போர்ட் லேண்டுக்கு பயணித்த அலாஸ்கா எயார்லைன்ஸிற்கு சொந்தமான 567 என்ற பயணிகள் விமான வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த போது, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கையில் தேள் கொட்டியது.
இதனால் வலியால் துடித்த அவர் அலறி கூச்சலிட்டார். அதை தொடர்ந்து விமானம் மீண்டும் லொஸ்ஏஞ்சல்ஸ்சுக்கே திருப்பப்பட்டு அங்கு தரை இறக்கப்பட்டது.
பின்னர் அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கொட்டிய தேள் அடித்து கொல்லப்பட்டது. விமானத்துக்குள் இது போன்று வேறு நச்சு பூச்சிகள் உள்ளனவா? என சோதனையிடப்பட்டது.
அதன்பின்னர் சிறிதுநேர கால தாமதத்துக்கு பின் மீண்டும் புறப்பட்டு சென்றது.VK
