நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டவைகளை பார்வையிட்ட அமைச்சர் ஹக்கீம்!

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்-

கொழும்பு, குதிரைப் பந்தையத் திடல், சுதந்திர சதுக்க பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களையும், உடற்பயிற்சி நிலையங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும், நடைபாதைகளையும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (19) அதிகாலையில் அவற்றைப் பராமரிக்கும் இராணுவ அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

பொது மக்களின் பொழுது போக்கு இடமாகவும், உடற்பயிற்சிக்கான இடமாகவும் காணப்படும் இந்த பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டது. இதன் ஒரு பகுதியை இராணுவத்தினரும், கடற்படையினரும் பராமரித்து வருவதோடு மற்றொரு பகுதியை விமானப் படையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் நடைபாதைகள் ஊடாகச் சென்ற போது அங்கு உடற்பயிற்சிக்காக வந்திருந்த பொது மக்களுடன் அமைச்சர் உரையாடி அவர்களது அபிப்பிராயங்களையும் கேட்டறிந்தார்.இதன் போது மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஈரான் தூதுவரும், கொழும்பு மாநகர மேயராக இருந்தவருமான ஒமர் காமில் ஆகியோருடனும் அவர் உரையாடினார்.

பிரபல்யம் அடைந்து வரும் இந்தப் பிரதேசத்தை மேலும் எழில்மிக்கதாக்குவதற்கும், அபிவிருத்தி செய்யவதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -