நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டு வரும் குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி பட்டப் படிப்புக்கான அனுமதி பெறப்பட்ட விதம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விசாரணை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டப்படிப்புக்கான பதிவு செய்தலின் போது பாரதூரமான தவறுகள் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்ச, கலாநிதி பட்டப்படிப்புக்கு முன்னரான ஆய்வு பட்டத்தை முழுமைப்படுத்தாமலேயே கலாநிதி பட்டத்தை பெற பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளதுடன் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச, கலாநிதி பட்டத்தை பெற விண்ணப்பித்த நேரத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்லைக்கழகத்தின் உபவேந்தராக என்.ஏ.எல். கருணாரத்ன பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
