மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை மேலும் 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு!

லங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்ரெம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தினார்.

இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசைப் போலல்லாது இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்த பல விஷயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க தனக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னைய ஆணையரான நவி பிள்ளைக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் இந்த கால நீடிப்பு அவசியமானது என்று தனக்கு கூறியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியம் வழங்கியவர்களும், இந்த காலநீடிப்பு இதனை நீர்த்துப்போகச் செய்யும் விஷயமாக எண்ணி அச்சம் கொள்ளலாம் என்ற யதார்த்தத்தை தான் ஏற்பதாக கூறியுள்ள அவர், ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான பலமான குரலாக தாம் ஒலிப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -