பொத்துவில் கோட்டத்தில் கடமையாற்றிய 32 ஆசிரியர்கள் கடந்த 2015.02.16 திங்கட்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையினால் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
ஆனால் இதுவரையில் ஒரு ஆசிரியர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை.72 ஆக இருந்த ஆசிரியர் பற்றாக்குறை 104 ஆக மாற்றமடைந்து மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தையும் தோற்றுவித்துள்ளதுடன், இந்நிலமை ஒரு வார காலத்திற்குள் நிவர்த்திக்கப்படாவிடின் பெற்றோர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவதற்குமுள்ளனர்.
ஏற்கனவே 72 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் 32 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது தான் என்ன? அரசியல் பழிவாங்கலா ?? நிர்வாக மாற்றமா? அவ்வாறனின் ஏன் ஒரு ஆசிரியர் கூட பொத்துவில் பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை? ஆட்சி மாற்றித்தில்ஃமுதலமைச்சர் மாற்றத்தினால் பொத்துவில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் மாற்றமா?அரசியல் சாதிகளின் மேடைகளில் ஏறி வலயம் கேட்கும், பௌதீன வளம் கேட்கும் எமது கல்வி அபிவிருத்திக் குழு எங்கே?
எனவே வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களே, கிழக்கின் அரசியல் தலமைகளே, பொத்துவில் கல்வி அபிவிருத்திக் குழுவே முழுக் கவனம் செலுத்து எம்மாணவர்களின் கல்வி நிலையில்.
